Date: 2025-12-27 | Department: Un-Aided Courses
Department of Commerce - Corporate Secretaryship (Unaided Stream) - Alumni meet conducted on 27.12.2025, 10 am
Date: 2025-12-23 | Department: Administration
தமிழ்நாடு அரசு - தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக - திருக்குறள் திருப்பணிகள் திட்டத்தின் கீழ் திருக்குறள் பயிலரங்கக் கூட்டம் 23.12.2025 செவ்வாய்க்கிழமை கல்லூரி முதல்வர் முனைவர் கு. பாலசுப்பிரமணியன் முன்னிலை நடைபெற்றது. கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி (பயிலரங்க குழு தலைவர், திருக்குறள் திருப்பணிகள் திட்டம்) அவர்கள் தலைமையுரை ஆற்றினார். மேலும் தமிழ் அறிஞர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
Date: 2025-12-17 | Department: Administration
ம.தி.தா இந்துக் கல்லூரியின் தேர்தல் விழிப்புணர்வு கழகம் சார்பில் இன்று 17.12.2025 காலை 10.30 மணிக்கு புதிய வாக்காளர் சேர்ப்பது தொடர்பாக படிவம் 6 யை நிரப்புவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. கல்லூரியின் தேர்தல் விழிப்புணர்வு கழக ஒருங்கிணைப்பு அலுவலர் முனைவர் சு. பரமசிவன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் கு.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார், சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி வட்டாட்சியர் திரு.செ.நா.சந்திரஹாசன் மற்றும் உதவி வட்டாட்சியர் திரு. ரா.முத்துபாண்டி மற்றும் தேர்தல் பிரிவு அலுவலக உதவியாளர் திரு.சே.பாலமுருகன் கலந்துக் கொண்டு மாணவர்களுக்கு புதிய வாக்களாரை இணைய வழி மூலமாக சேர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் வாக்குரிமையின் அவசியம் பற்றியும் இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்முறைகள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார்கள்
Date: 2025-12-11 | Department: Administration
வ.உ.சி - பாரதியார் நூல் வாசிப்பு மன்றம் தொடக்க விழா 11.12.25 அன்று நடைபெற்றது. இதில் எழுத்தாளர் கதிர் நம்பி அவர்கள் கலந்து கொண்டு நூல் வாசிப்பு மன்றத்தை தொடங்கி வைத்தார்கள். கல்விச்சங்க பொருளாளர் திரு.தளவாய் திருமலையப்பன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் திரு. திருவாரியமுத்து மற்றும் திரு. சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.