Date: 2026-06-20 | Department: Administration
ம.தி.தா. இந்துக் கல்லூரியில் சிங்கப்பெண் அதிரடிப்படை கருத்தரங்கம்
திருநெல்வேலி பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் தமிழ்நாடு முதல்வர் தொடங்கியுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மூலம் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு கருத்தரங்கை கல்லூரி முதல்வர் முனைவர் கு. பாலசுப்பிரமணியன் தலைமையேற்று தொடங்கி வைத்தார். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக தமிழக அரசால் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.பொது இடங்களில் பெண்களின் மீதான வன்முறை மற்றும் பாலியல் தொந்தரவுகளை தடுக்கும் நோக்கத்தில் சிங்கப்பெண் அதிரடிப்படை செயல்படுகிறது. எனவே மாணவிகள் தங்களுக்கு பிரச்சனை ஏற்படும்போது 1091 எண்ணுக்கு தொலைபேசியில் அழைத்தால் உடனடியாக அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும். மேலும் மாணவர்கள் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மதிப்பு அளிக்கக்கூடியவர்களாக பொறுப்புள்ள குடிமகனாக வளர வேண்டும் என்று அறிவுரை கூறினார். விழாவில் சிங்கப்பெண் அதிரடிப்படை காவலர்கள்,கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.