Events
Events

Date: 2026-06-19 | Department: Administration

WORLD YOGA DAY CELEBRATIONS

திருநெல்வேலி ம.தி.தா.இந்துக் கல்லூரியில் மூன்று நாள் யோகா தின கொண்டாட்டம்


திருநெல்வேலி பேட்டை ம.தி‌.தா. இந்துக் கல்லூரியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு இன்று 19.06 2026 முதல் 21.06.2026 வரை மாணவர்களுக்கான யோகா செயல் விளக்கம் மற்றும் மாபெரும் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.யோகா பயிற்சி வகுப்பைக் கல்லூரி முதல்வர் முனைவர் கு. பாலசுப்பிரமணியன் தலைமையேற்று தொடங்கி வைத்தார். கல்லூரி உடற்கல்வி இயக்குனர் கந்தசாமி, கல்லூரி உடற்கல்வி மற்றும் விளையாட்டு துறைத்தலைவர் கார்த்திகேயன், பேராசிரியர்கள் இசக்கியப்பன், விஷ்ணு, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் இலக்குவன், சரவணன், முத்துலட்சுமி, பிச்சம்மாள், பாதாளம், ராமலட்சுமி, தேசிய மாணவர் படை அதிகாரி செந்தில்குமார் ஆகியோர் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

இன்று முதல் கட்டமாக மாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம் உள்ளிட்ட 10 யோகாசனங்கள் கற்பிக்கப்பட்டன.
நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

back top